“Book Descriptions: புலம்பெயர் வாழ்வில் முதல் தலைமுறையினரின் பாரிஸ் அனுபவங்களை நுண்ணுணர்வோடும் பகடியாகவும் சித்தரிக்கும் நூல். "எழுதித் தீராப் பக்கங்கள்" செல்வம் அருளானந்தம் என்ற தனி மனிதனின் சுயசரிதமல்ல, பாரீஸ் தமிழ்ச் சமூகத்தின் வழியே ஒப்பு நோக்கிப் பார்க்கப்படும் எண்பதுகளின் புலம்பெயர் தமிழரது வாழ்வியல் சரிதம். "எழுதித் தீராப் பக்கங்கள்"வாழ்வியல் அனுபவப் பக்கங்களைப் படிக்க நேர்கிறது. ஈழத் தமிழரின் புலப் பெயர் வாழ்வின் ஆரம்ப நாட்களின் வாழ்வியல் ஆவணப் பதிவுகளில் ஒன்றாகக் கொள்ளக் கூடிய தகுதியை நிரம்பக் கொண்டது இது. இந்த ஆவணத் தொடர் தாய் வீடு (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து தமிழினி வெளியீடாக நூலுருப் பெற்றிருக்கிறது.” DRIVE