“Book Descriptions: ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்.
விமலாதித்தன் உடல் நலக் குறைவால் இறக்கிறான். கீழைச் சாளுக்கியதைக் காப்பாற்ற ராஜேந்திரரின் மகன் மனுகுல கேசரி தலைமையில் சோழப் படை செல்கிறது. போரில் மனுகுல கேசரி இறக்கிறான் மற்றும் மூன்று தளபதிகள் கொல்லப்படுகிறார்கள்.
ராஜேந்திரர் தனது மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறார். இதனால் சோழ நாடும், கீழைச் சாளுக்கியமும் மேலைச் சாளுக்கியதிடமிருந்து பாதுக்கப்படும் என்று கருதுகிறார்.” DRIVE