“Book Descriptions: இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்பது மட்டுமல்ல, ராஜராஜ சோழர் காலத்திலும், ராஜேந்திர சோழ தேவர் காலத்திலுமிருந்த தமிழர்களின் கடலாதிக் கத்தை மீண்டும் நிலை நிறுத்துவதென்றும் அன்றே பிரதிக்ஞை செய்தேன். அந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றவே இந்த அக்ஷயமுனை வந்தேன். இங்கு நமது கப்பலை நல்ல பலமுள்ளதாகச் செய்து பழுதும் பார்ப்போம். புதுப் புது விதப் போர்க்கலங்களை இதில் பொருத்து வோம்! பிறகு கடலோடுவோம்! கடலோடி, கலிங்கக் கப்பல்களை மறிப்பதற்கும், பிடிப்பதற்கும், அழிப்பதற்கும் கடலில் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அக” DRIVE