“Book Descriptions:விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வார் இளவரசனை நோக்கிய ஜோகி, “விளக்கை நன்றாக உற்றுப்பார். கவனத்தை வேறு எங்கும் திருப்பாதே” என்று நிதானமாகக் கூறினார். “மலைஅரசி! பந்தத்தை அணைத்துவிடு” என்று அந்தப் பெண்ணுக்கும் உத்தரவிட்டார். அடுத்த விநாடி அவள் பந்தத்தை பக்கத்துப் பாறையில் தீய்த்து அணைத்துவிடவே, தீபத்தின் ஜோதி ஒன்றே குகையின் உட்புறத்தை ஆட்கொண்டது. “மார்வார் ராஜபுத்திரனே! இப்பொழுது பார் ஜோதியை” என்றார் ஜோகி சாந்தமான குரலில். ராவ்ஜோடா அகல்விளக்கின் ஆடாமல் நின்ற சுடரை நோக்கி&” DRIVE