“Book Descriptions: ஆபத்துக்குப் பொய் சொல்வதில் பாவமில்லை என்பார்கள். தருமர், "அஸ்வத்தாமா, அத குஞ்சரஹா" - என்று துரோணாச்சாரியாரை நிலைகுலையச் செய்யும் பொருட்டு சொல்லிய ஒரு பொய்யால், அதுவரை நிலத்தில் பதியாமல் ஓடிக்கொண்டிருந்த அவரது ரதம், பூமியில் படிந்து விட்டதாம்.
எனக்கு இரதம் எதுவும் கிடையாது. ஏற்கனவே, எனது கார் நிலத்தில் பதிந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே, நிறையப் பொய்களைத் துணிந்து சொல்லலாம். ஆனாலும், ஒரு எழுத்தாளர் பொய் சொல்வதற்கு முன்பாக நிறைய யோசிக்க வேண்டும். இன்று துணிந்து பொய் கூறினால், நாளை உண்மை சம்பவங்களைப் பற்றி எழுதும் போது, ஆதாரங்களைத் தந்தாலும், அவற்றை வாசகர்கள் நம்ப மறுப்பார்கள். சரித்திர நாவல்களை எழுதும்போது, "நீங்கள் எழுதுவது உண்மை சம்” DRIVE