“Book Descriptions: காதலும் காற்றும் கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. காற்று நுழையாத இடத்தில்கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன்போல் வரும் காதல், உரிமையாளன்போல் வீட்டுக்குள் தங்கிவிடுகிறது. காலம்காலமாக இந்த மண்ணில், ஜெயித்த காதலைவிட தோல்வியுற்ற காதலும் ஒருதலைக் காதலுமே காவியமாகி நம் மனதில் இடம்பெற்றிருக்கின்றன. நான் சென்றபோது அந்த ஊரில் ஒரு கல்யாண வரவேற்பு நடந்து கொண்டு இருந்தது. தோடர்கள் வீட்டுக் கல்யாணம். கன்னடம் கலந்த சடங்குப் பாடலும், கல்யாண விருந்துமாக அந்த இடம் இன்றும் எனக்குள் ஒரு அமானுஷ்யமான பரவசத்துடன் தங்கியிருக்கிறது. இந்தப் பயணமே ஏழு வருடங்கள் கழித்து 'கண் பேசும் வார்த்தைகள்' பாடலில் “காட்டிலே காயும் நிலவைக் கண்டுகொள்ள யாருமில்லை. தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை” என ஒருதலைக்காதலுக்கு இரண்டு உருவகங்களை எனக்குக் கொடுத்தது. (நூலிலிருந்து)” DRIVE