“Book Descriptions: பொதுவாக நவீனங்களுக்கு முன்னுரை தேவையில்லை. ஆனால் டாக்டர் டேனியலின் ரெட் டீ முற்றிலும் வேறு வகையானது. இது ஒரு கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்ககாலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணையையும் தருகிறது.
தோட்டத் தொழிலாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் டாக்டர் டேனியல். அவர்களிடையே முதல்முதலாக தொழிற்சங்கம் அமைத்தவர்களில் ஒருவர் அவர். எனவே மற்றெல்லோரையும் விட இந்நூலை எழுதுவதற்குத் தகுதி பெற்றவர் டாக்டர் டேனியல்தான்.
நூலில் வரும் கதாபாத்திரங்கள் வேண்டுமானால் கற்பனையானவையாக இருக்கலாம். ஆனால் ஆசிரியர் விவரித்துள்ள நிலைமைகள் தோட்டங்களில் உண்மையில் நிலவியவைதான். இந்தத் தோட்டங்கள்தான் படுமோசமாக நிர்வகிக்கப்பட்டவை. அவற்றில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க மிக மிகக் குறைவான முயற்சியே எடுக்கப்பட்டது.
தொடக்கக் காலங்களில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்வையும், வாழ்நிலையையும் பற்றி நாவல்.” DRIVE