“Book Descriptions: மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதே வெண்முரசின் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது நால்வேதம். நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமே நாராயண வேதம். அதாவது கீதை. கீதையின் பீடமே மகாபாரதம். அதன் முன்னோடி நூல்கள் உபநிடதங்களும், கீதையிலேயே குறிப்பிடப்படும் பிரம்மசூத்திரமும். வேதங்களுக்கும் வேதாந்தத்திற்குமான முரண்பாடு அல்லது முரணியக்கம் கீதையிலேயே சொல்லப்பட்ட ஒன்று. அதையே வெண்முரசு மொத்த மகாபாரதமாக விரித்துக்கொள்கிறது. ஆகவே வெண்முரசில் கீதை களத்தில் நிகழவில்லை. அது கிருஷ்ணனால் அர்ஜுனனுக்கு உரைக்கப்படுகிறது— பிறிதொரு மெய்வெளியில். அதேசமயம் அது அனைத்து மகாபாரதக் கதைமாந்தர்களுக்கும் அவரவருக்கு உகந்த வடிவில் உரைக்கப்படுகிறது. இமைக்கணக் காடு என இங்கே சொல்லப்பட்டிருக்கும் நைமிஷாரண்யத்தில்தான் பின்னர் மகாபாரதக் கதை முழுதுறக் கூறப்பட்டது. ஆகவே அதுவே கீதைக்குரிய காடு. இந்நூல் வெண்முரசு வெவ்வேறு நூல்களினூடாகச் சொன்ன வேதாந்தக் கருத்துக்களை புனைவுவடிவில் அளிக்கும் ஒரு தனிநூல். இமைக்கணம் – வெண்முரசு நாவல் வரிசையில் பதினேழாவது நூல்.” DRIVE