“Book Descriptions: இந்தப் 'பொய் மான்' கரடு என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது, ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை! ஒரு பெரிய கேணி வாயை 'ஆ' வென்று திறந்து கொண்டு இருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது! கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாக பிழைத்திருக்கிறார்கள்!
பாத்திரங்களில் சிலர் முரடர்களாய் இருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடுமுரடாய் இருப்பதாகவும் வாசகர்களுக்கு தோன்றினால் அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர என் குற்றமல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய் மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்த சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களை துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு! எவ்வளவு மனக்கிளர்ச்சி! என்ன தீவிர உணர்ச்சி! ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயை தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.” DRIVE