“Book Descriptions: பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். அந்த வகையில் அவரை தி.ஜானகிராமனின் வாரிசு என்றே கூறுவேன். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள்.