“Book Descriptions: இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது.
போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும், ஒவ்வொரு விதமான முடிவை முன்வைக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். புலப்படாத மர்மம்.
இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட தனி ஒரு பாகம்.” DRIVE