“Book Descriptions: அருணா பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.
- அ. முத்துலிங்கம்
இளமை நினைவுகளை எழுத முற்படும்போது, நினைவேக்கத்தின் தழுதழுப்பும் இழந்தவை பற்றிய பொருமலும் தவிர்க்கமுடியாமல் வெளிப்படும். அருண்மொழியின் கட்டுரைகளில் அது நடக்கவில்லை . துல்லியமான விபரங்களுடன், சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம். சமனமான, முதிர்ந்த நடை.