“Book Descriptions: இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக்கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதியின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் திறன் அற்றவர்கள். சென்னையில் எழுபதுகளில் இருந்திருக்கக்கூடிய ஒரு குடும்பத்தின் சித்திரத்தை அசோகமித்திரன் தரும் விதத்தில் அந்தக் குடும்பம் நமது அக்கறைக்குரிய குடும்பமாக மாறிவிடுகிறது. இறுக்கமும் அவஸ்தையும் பதற்றமும் நிரம்பிய இந்தக் குடும்பத்தினரின் அன்றாட வாழ்வின் சித்திரங்களை அசோகமித்திரன் தருகிறார். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். மணல் உங்களுக்குப் பதில் சொல்லாது. மணலைத் தோண்டிப் பார்த்து அறிந்துகொள்ளலாம். - அரவிந்தன்” DRIVE