“Book Descriptions: 1938-ல் இந்தி எதிர்ப்பு முதற்போரில் மூல முழக்கமிட்ட முப்பெருந்துறவிகளில் ஒருவரான அருணகிரி அடிகளார் தலைமையிலே திருவண்ணாமலையில் 1957ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கிய முழக்கத்தை இப்போது வெளியிட வேண்டி இருக்கிறது. இந்தப் பேச்சைப் படித்த பிறகு நீறு பூத்த நெருப்பாய் இருக்கும் நம் இந்தி எதிர்ப்புக் கனல் கொழுந்து விட்டு எரியட்டும்.'' இந்தியை இடையிலே உள்ள மும்மொழிப் பலகைகளைக் காணுந்தோறும் நாம் வடநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அடிமைகள் - இந்தியத் துணைக்கண்டத்தின் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற உணர்வு கிளர்ந்து எழட்டும். தென்னவரை அடிமைப்படுத்தும் கருவியாகிவிட்ட ஆட்சிமொழி பற்றிய அரசியல் சட்ட விதியே அகற்றப்பட்டே ஆகவேண” DRIVE