“Book Descriptions: சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல் நாதஸ்வக் கலைஞர்களுடைய கதையைச் சொல்லுவதால் சஞ்சாரம் என்ற பெயர் பொருந்துகிறது. அதேபோல் இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசவும், இசை சம்பந்தமாக, அவர்களின் வாழ்க்கை சம்பந்தமாகவும் பல விவரங்களை சேகரிக்கவும், ஆய்வுகள் நடத்தவும் நூலாசிரியர் நிறையவே சுற்றி அலைந்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் என்பதால் சஞ்சாரம் என்ற தலைப்பும் இதற்குப் பொருந்துகிறது.
பதினைந்து ஆண்டுகாலமாக இவருடைய சிந்தனையில் இழை ஓடிக் கொண்டிருந்த நாதஸ்வரக் கலைஞர்களுடைய கசப்பான வாழ்நிலை பற்றிய எண்ணம் நாவலாக உருவெடுத்தது. அவற்றை மிக அக்கறையோடு அசலாக வடித்துள்ளார். அந்த முயற்சியில் மூச்சுப் பிடித்து மூழ்கி எழுந்துள்ளார். நாதஸ்வரக் கலைஞராகவே (Metamorhosic) உருமாறியுள்ளார்.” DRIVE