“Book Descriptions: ஒளிப்பதிவு கருவியில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளைக் கணிப்பொறியில் ஏற்றியதும் அவற்றை ஒழுங்குபடுத்தி தொகுக்க உதவும் மென்பொருள் வகைகளில் ஒன்றுதான் FCP 10. துண்டு துண்டு காட்சிகளாக கணினியில் கிடக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமுதற் கதையாக வடிவமைப்பதே படத்தொகுப்பு என்ற பணியின் அடிப்படை. படத்தொகுப்பாளர்களும் ஒருவகை கதைசொல்லிகள்தான். மெய்நிகரியின் கதைசொல்லியும் டெரன்ஸ்பால் என்ற ஒரு படத்தொகுப்பாளன்தான். சிலர் டைரி எழுதுவது போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் அனுபவங்களைக் காட்சித்தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் உடையவன். தற்போது தன் அறையில் அமர்ந்து மறக்க முடியாத சில நாட்களைத் திரும்பி பார்க்கிறான். கடந்த இரண்டு வருடங்களில் தான் எடுத்த புகைப்படங்கள் செல்போன் வீடியோக்கள் என்று பல தரவுகளையும் தன் எடிட்டிங் டைம்லைனில் அடுக்கி அழகுப்படுத்துகிறான். தன் மென்பொருளின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலமாக பிம்பங்கள் அனைத்தையும் பென்சில் ஓவியங்களாக மாற்றி மகிழ்கிறான். இந்தப் படங்களின் பின்னணியில் தன் பின்னூட்ட குரல் (voice over) வழி கடந்தகாலம் பற்றிய விவரணைகளை வழங்குகிறான். அவனை பாதித்த மனிதர்களைப் பற்றி சிறு குறிப்பு வரைகிறான். நினைவுகள் விரிகின்றன. டெரன்ஸ்பாலின் குரலாக கதை நகர்கிறது.” DRIVE