“Book Descriptions: மகாபாரத போர் நடக்கையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசமே பகவத் கீதை. இந்த உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எத்தொழில் புரிவோருக்கும் பொருந்தும். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியை போதித்தலே கீதையின் சாராம்சம் என உணர வைத்தவர் மகாகவி பாரதியார். சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு எளிய தமிழ் அர்த்தம் கற்பித்து தனது பாணியில் அழகிய தமிழில் நமக்கு அவர் அளித்த பொக்கிஷம். பாரதியின் பார்வையில் புத்தம் புது அர்த்தங்களோடு மெய்ஞானம் உணர்த்தும் பகவத் கீதை உரையை கேட்டுப் பயன் பெறுங்கள்.” DRIVE