“Book Descriptions: ‘மானுடம் வெல்லும்’ எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்கமாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்காரர்கள் மூலம் தமிழர் கற்றுக்கொண்ட பிரெஞ்ச் - தமிழ் வாழ்க்கையையும் கலை நேர்த்தியுடன் படைத்தளிக்கிறது இந்நாவல். அக்காலத்திய பிரெஞ்ச் -தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்.
அரசர்களின் வாழ்க்கையை எழுதுவதே வரலாற்று நாவல் என்ற போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்து சாதாரண குடிமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறிய வணிகர்கள், அரசு அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தாசிகள் என்று அனைத்து மக்களையும் தழுவிய மக்கள் வரலாற்று நாவல் என்று விமர்சகர்கள் இந்நாவலைக் குறிப்பிடுகிறார்கள்.” DRIVE