சற்றுத் திறந்து பாடலாம் என முக்கிப் பார்க்கையில் தொண்டை நெரிந்து போயிருப்பது புலப்படுகிறது. அல்லது வெளியிலிருந்து குரல்வளை நெரிக்கப்படுகிறது.
இந்தச் சுதந்திரம் கூட இல்லாமல், எல்லாம் எதற்கென்று தோன்றுகிறது.
நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்... கையைத் தூக்கிப் பிடித்து நாய்க்குக் காட்டும் பிஸ்கெட் போலச் சில பரிசுகள், நோக்கம் நாயின் பசியாற்றுதலா அல்லது துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக் கண்கொள்ளாமல் கண்டுகளித்தலா என்று தெரியவில்லை.
படைப்பாளி என்பவர் பங்களாவின் சொகுசு வளர்ப்பல்ல.” DRIVE