“Book Descriptions: கடவுள் உலகையும் உலகின் உயிர்களையும் படைத்தார்!’இப்படி ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிட்டுப் போய்விடலாம். அல்லது நிஜமாகவே உயிர் எப்படித் தோன்றியிருக்கும் என்று கடவுளை மறந்துவிட்டு யோசித்துப் பார்க்கலாம்.சிக்கல் என்னவென்றால் ஜீனோம், குரோமோசோம், ஏடிஸிஜி, டிஎன்ஏ, ஆர்என்ஏ என்று ஏதேதோ கிரேக்க எழுத்துகளைக் கொண்டு வந்து குழப்பி, வதக்கி, பிழிந்து எடுத்துவிடுவார்கள்.ஒரே ஆச்சரிய விதிவிலக்கு, சுஜாதா! யாரோ சிலருக்கான அறிவியலை, எல்லோருக்குமான அறிவியலாக மாற்றும் முயற்சியில் சுஜாதா பெற்றிருக்கும் வெற்றி தனித்துவமானது.உயிர் எப்படித் தோன்றியிருக்கும் என்னும் கேள்வியை, ஒரு துப்பறியும் நாவலைவிடவும் சுவாரஸ்யமாக அணுகமுடியும் என்பதை ஜீனோமில் சுஜாதா நிரூபித்திருக்கிறார்.ஈடுஇணையற்ற இன்டலெக்சுவல் விருந்து.” DRIVE