“Book Descriptions: ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம்.” DRIVE