“Book Descriptions: புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் செய்து என அக்குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசுக்கு அமெரிக்க மருத்துவமனையில் வேலை நியமனம் கையில் கிடைக்கிறது. தம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு குடும்ப சகிதமாய் தஞ்சை ஜில்லாவுக்குப் பயணிக்கிறார்கள். ஐந்தாம் தலைமுறை பெண்ணுடன் உடன் பயணிக்கிறார் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த பாட்டி ஒருவர். வீட்டுக்கு மருமகளாய் வரப்போகும் பெண்ணிடம் விவரிப்பதாய் நகர்கிறது கதை. பாலகுமாரன் எழுதி 2000-த்தில் ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த தொடர்கதை பின்னாளில் நூல்வடிவமாகியது.” DRIVE